;
Athirady Tamil News

வல்­வெட்­டித்­து­றை நீச்­சல் தடாக கட்­டு­மா­னத்தை விரை­வாக முடிக்­கப் பணிப்பு..!!

0

வல்­வெட்­டித்­து­றை­யில் அமைக்­கப்­ப­டும் நீச்­சல் தடா­கக் கட்­டு­மா­னப் பணி­களை விரை­வில் முடிக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­யுள்­ளார் நிதி மற்­றும் ஊட­கத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர. நேற்று வல்­வெட்­டித்­து­றைக்­குச் சென்ற அமைச்­சர் மங்­கள சம­ர­வீர அங்கு 7 கோடி ரூபா செல­வில் அமைக்­கப்­ப­டும் நீச்­சல் தடா­கத்­தைப் பார்­வை­யிட்­டார். அதன்­போதே இவ்­வாறு தெரி­வித்­தார்.

மாகா­ண­சபை உறுப்­பி­னர் சிவா­ஜி­லிங்­கம் வல்­வெட்­துறை நகர சபை செய­லா­ளர் மற்­றும் நக­ர­ச­பைக்கு புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளும் அமைச்­ச­ரு­டன் சென்­றி­ருந்­த­னர்.
அதே­வேளை, உடுப்­பிட்­டி­யில் குடி­ய­மர்த்­தப்­பட்ட பலா­லி­யைச் சேர்ந்த மக்­கள் தமக்கு அடிப்­படை வச­தி­கள் ஏது­வும் செய்து தரப்­ப­ட­வில்லை என்று நிதி மற்­றும் ஊடக அமைச்­ச­ரி­டம் முறை­யிட்­ட­னர். அவற்றை உட­ன­டி­யா­கச் செய்து தர வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­த­னர்.

அவர்­க­ளின் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்ட அமைச்­சர் இரு­வா­ரங்­க­ளுக்­குள் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று உறு­தி­ய­ளித்­தார். உடுப்­பிட்­டி­யில் தனி­யார் காணி ஒன்­றில் தங்­கி­யி­ருந்த பலா­லி­யில் இருந்து இடம்­பெ­யர்ந்த 17 குடும்­பங்­கள் நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். காணி­யின் உரி­மை­யா­ளர் தொடுத்த வழக்­கின் அடிப்­ப­டை­யில் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. காணி­யில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட மக்­கள் அரச காணி ஒன்­றில் குடி­ய­மர்த்­தப்­பட்­ட­னர்.

மங்­கள சம­ர­வீர நேற்று வல்­வெட்­டித்­து­றைக்­குச் சென்­றி­ருந்த நிலை­யில் அந்­தக் குடும்­பங்­க­ ளைச் சேர்ந்த சுமார் 30 பேர் அமைச்­ச­ரைச் சந்­தித்­த­னர். தாம் தற்­போது குடி­ய­மர்த்­தப்­பட்ட இடத்­தில் குடி­தண்­ணீர், மல­ச­ல­கூட வச­தி­கள் எது­வும் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. எவ்­வி­த­மான அடிப்­படை வச­தி­க­ளும் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்று அந்த மக்­கள் முறை­யிட்­ட­னர்.

அவர்­க­ளின் கோரிக்­கை­க­ளைச் செவி­ம­டுத்த அமைச்­சர், இரு­வா­ரங்­க­ளுக்­குள் அவர்­க­ளுக்­குத் தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கு­மாறு பிர­தேச சபை அதி­கா­ரி­க­ளுக்­குப் பணிப்­புரை விடுத்­தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 12 =

*