;
Athirady Tamil News

பிரதமர் ரணில், நம்பிக்கையில்லாப் பிரேரணை; “புளொட்” அமைப்பின் நிலைப்பாடு என்ன?..!!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானமே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தீர்மானமாக இருக்குமென, அந்த கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இன்றும் நாளையும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான விடயத்தில், கூட்டமைப்பிற்கும் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போது, இதற்கு பதிலளித்த சித்தார்த்தன் எம்.பி “இன்றும் நாளையும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். இதன் பின்னர் கூட்டமைப்பு ஏகமனதாக எடுக்கும் தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதுகுறித்து, புளொட் முக்கியஸ்தர் ஒருவரிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “தலைவர் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்து இருப்பது உண்மை தான், இதேவேளை சுன்னாகம் பிரதேச சபையில் “தவிசாளர் தெரிவின் போது” நடைபெற்ற சம்பவங்களையும் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பீடத்துக்கு அறிவித்து உள்ளோம். இதுக்குரிய சரியான தீர்வு எடுக்கப்படாவிடில், நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பின் போது “நடுநிலைமை” வகிப்போம் என்பதையும் சம்பந்தப்படடவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்” எனவும் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 5 =

*