;
Athirady Tamil News

கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்புகிறார் கருணா அம்மான்..!!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனது சுயமதிப்பை இழந்து, ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. வடக்கில் ஈ.பி.டி.பியுடன் இணைய முடியும் என்றால், கிழக்கில் எங்களுடன் இணைந்து ஏன் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற தமி­ழர் ஐக்­கிய சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களுக்­கான சத்­தி­யப்­பி­ர­மாண நிகழ்வு நேற்­று­முன்­தி­னம் மாலை மட்­டக்­களப்­பில் நடை­பெற்­றது. அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ்த் தரப்­பு­க்க­ளு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு நாங்­கள் தயா­ராக இருக்­கின்­றோம். வெற்றி பெற்­றி ­ருக்­கின்ற எங்­க­ளு­டைய வேட்­பா­ளர்­க­ளின் பிர­தே­சங்­க­ளில் எங்­க­ளு­டைய கட்­சி­யின் ஆத­ர­வில்­லா­மல் ஆட்­சி­ய­மைக்க முடி­யாது என்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

வர­வி­ருக்­கின்ற மாகா­ண­ச­பைத் தேர்­த­லிற் கூட கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருக்­கின்ற அனைத்துத் தமிழ்க் கட்­சி­க­ளும் இணைந்து போட்­டி­யிட வேண்­டும் என்­பதே எங்­க­ளு­டைய விருப்­ப­மும், எதிர்­பார்ப்­பு­மா­கும். அதற்­காக இந்தப் பிர­தேச சபை ­க­ளில் இணைந்து செயற்­பட நாங்­கள் திட்­ட­மிட்­டி­ருக்­கின்­றோம்.

தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரிய பின்­ன­டைவைச் சந்­தித்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்­கள் விடு­த­லைப்­பு­லி­கள் கட்சி கடந்த காலங்­க­ளில் முழுப் பிர­தேச சபை­ க­ளி­லும் ஆட்­சி­யி­லி­ருந்­தி­ருந்­தா­லும் இந்த முறை ஒரு பிர­தேச சபை­யைக்­கூட அவர்­க­ளால் முழு­மை­யாகக் கைப்­பற்ற முடி­ய­வில்லை. இவ்­வா­றா­ன­தொரு சங்­க­ட­மான நிலை­யில் தான் ஆட்­சி­ய­மைப்­பது சம்­பந்­த­மான பேச்­சுக்­கள் நடை­பெற்­று­வ­ரு­கின்­றன.

தெற்­கில் மகிந்த ராஜ­பக்­ச­வுக்குக் கிடைத்த வெற்­றியை எங்­க­ளு­டைய கட்­சிக்­கான பெரிய வெற்­றி­யாக நாங்­கள் பார்க்­கின்­றோம். விரை­வில் ஒரு ஆட்சி மாற்­றம் வரும் என்­பது உறு­தி­யான விட­ய­மா­கும். எதிர்­கா­லத்­தில் எங்­க­ளு­டைய கை க­ளில் நிர்­வா­கங்­கள் வரும். அதன் மூலம் நாங்­கள் எமது மக்­க­ளுக்குப் பல சேவை­களை ஆற்­று­வோம்.

எங்­க­ளைப் பொறுத்­த­வரை ரணில் தலைமை அமைச்­ச­ராக இருப்­ப­தற்குத் தகு­தி­யற்­ற­வர். மைத்­தி­ரி­யும் ரணி­லும் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் எத­னை­யும் நிறை­வேற்­ற­வில்லை.
இவர்­களை நம்­பித்­தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்கு ஆத­ரவு வழங்­கியி­ருந்­தார்­கள். இன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மௌனி­யா­கவே இருக்­கின்­றது. இதனைத் தமிழ் மக்­கள் விளங்­கிக்­கொண்டு ஒன்­று­பட்டுச் செயற்­ப­ட­வேண்­டும். கிழக்கு மாகா­ண­ சபைத் தேர்­த­லில் எதிர்­வ­ரும் காலத்­தில் ஒரு மாற்­றத்தை நாங்­கள் ஏற்­­படுத்­து­வோம்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று தங்­க­ளது சுய­ம­திப்பை இழந்து ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ள­து. ஆனால் கிழக்கு மாகா­ணத்­தில் பல தமிழ்க் கட்­சி­கள் வெற்­றி­பெற்­றுள்ள நிலை­யி­லும் அவர்­க­ளு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்குத் தடை­யா­க­வுள்­ள­னர். வாகரை மற்­றும் வாழைச்­சேனைப் பகு­தி­க­ளில் தமிழ் மக்­கள் விடு­த­லைப்­பு­லி­கள் கட்சி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, எங்­க­ளது கட்சி வென்­றுள்­ளது. இந்த மூன்று கட்­சி­க­ளும் இணைந்­தால் முஸ்­லிம்­களைத் தவிர்த்து அங்கு ஆட்­சி­ய­மைக்­க­ மு­டி­யும்.

ஆனால் அதற்குத் தமிழ்த் தேசி ­யக் கூட்­ட­மைப்பு முன்­வ­ரு­ வ­தில்லை. டக்­ளஸ் தேவா­னந்­தாவை ஒட்­டுக் குழுவென்­றும் காட்­டிக்­கொ­டுத்­த­வர் என்­றும் துரோ­கி­யென்­றும் கூறிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று அவர்­க­ளு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளது என்­றால் ஏன் இங்­குள்­ள­வர்­க­ளு­டன் ஆட்­சி­ய­மைக்­க­மு­டி­யாது.

இதனைப் பிர­தே­ச­வா­த­மற்ற நிலை­யில் பார்க்­க­வேண்­டும். யாழ்ப்­பாணத்துக்கு ஒரு­முறை, மட்­டக்­க­ளப்­புக்கு ஒரு­மு­றை­யெனத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புச் செயற்­ப­டு­வது ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாத விட­யம். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு புத்­தி­சா­து­ரி­ய­மாகச் செயற்­ப­டு­ மா­க­வி­ருந்­தால் வட -– கிழக்­கில் அனைத்து உள்­ளூ­ராட்சிச் சபை­ க­ளை­யும் தமி­ழர்­க­ளைக் கொண்டே ஆட்­சி­ய­மைக்­கும் நிலை­யி­ருக்­கின் ­றது. இதனை மக்­கள் புரிந்­து­கொள்­ள ­வேண்­டும் – – என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 4 =

*