;
Athirady Tamil News

இலங்­கை­யில் தமி­ழர்­கள் இழப்­ப­தற்கு எது­வு­மில்லை- தென்­னிந்­தியப் பாடகி..!!

0

இலங்­கை­யின் வட பகு­தி­யில் 2005ஆம் ஆண்டு எனக்கு கிடைத்த நண்­பர்­க­ளில் பலர் இன்று உயி­ரு­டன் இல்லை. எமது மக்­கள் அதி­க­மா­கவே இழந்­துள்­ளார்­கள். இதற்­கு­மேல் இழப்­ப­தற்கு ஒன்­று­மில்லை. எமது மக்­கள் இழந்த எதை­யும் எங்­க­ளால் திருப்­பித்­த­ர­ மு­டி­யாது. இவ்­வாறு தென்­னிந்­தி­யா­வின் பாடகி கல்­பனா தெரி­வித்­தார்.

கல்­பனா உள்­ளிட்ட பாட­கர் குழு­வி­னர் வவு­னி­யா­வில் இடம்­பெ­ற­வுள்ள இசை நிகழ்வு ஒன்­றுக்­காகத் தமி்ழ் நாட்­டில் இருந்து வவு­னி­யா­வுக்கு வருகை தந்­தி­ருந்­த­னர். அவர்­கள் அங்­குள்ள விருந்­தி­னர் விடுதி ஒன்­றில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­துக் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­த­னர். இதன் போதே பாடகி கல்­பனா இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது; எனது முதல் இசை நிகழ்வு இலங்­கை­யில் ஆரம்­ப­மா­னது. அதே­போல் அதி­க­மான இசை நிகழ்­வு­க­ளில் கலந்து கொண்­டுள்­ள­தும் இலங்­கை­யில் தான். சென்­னை­யி­லி­ருந்­தும் அதி­க­மான தாய­கப்­பா­டல்­கள் பாடி­யி­ருக்­கின்­றேன். அதே நேரம் தாய­கத்­துக்­கும் வந்து பாடி­யி­ருக்­கின்­றேன். கடந்த 2005ஆம் ஆண்டு தாய­கப்­பா­டல்­கள் ஒலிப்­ப­திவு செய்­து­கொள்­வ­தற்­காகக் கிளி­நொச்­சிக்கு எனது தாயா­ரு­டன் சென்­றி­ருந்­தேன்.

இத­னால் எனக்கு இலங்­கை­யில் பல நண்­பர்­கள் இருந்­தார்­கள். இன்று பலர் உயி­ரு­டன் இல்லை. சில­பேர் வேறு நாட்­டில் இருக்­கின்­றார்­கள். அந்த நினை­வு­கள் எனக்கு ஞாப­கம் வரு­கின்­றன. மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­துக்­குச் சென்­ற­போது நான் அழு­த­தை­விட எனது தாயார் அங்கு அதி­க­மா­கக் கதறி அழு­தி­ருந்­தார். அடிப்­ப­டை­யில் உல­கத்­தில் எவ்­வ­ளவு மக்­கள் எவ்­வா­றான கஷ்­டங்­களை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.

அதிலே முக்­கி­ய­மாக நமது மக்­கள் அதி­க­மா­கவே இழந்­துள்­ளார்­கள். இதற்­கு­மேல் இழப்­ப­தற்கு ஒன்­று­மில்லை. எமது மக்­கள் இழந்த எதை­யும் எங்­க­ளால் திருப்­பித்­த­ர­மு­டி­யாது. ஆனால் ஒரு நான்கு மணி­நே­ரம் கஷ்­டங்­கள், பிரச்­சி­னை­கள் எல்­லா­வற்­றை­யும் மறந்து நல்ல இசை­யைக்­கேட்­டு­க் கொள்­வ­தற்கு ஒரு சந்­தோ­சத்­தைக் கொடுக்க முடி­யும். அதை நாங்­கள் பெரு­மை­யா­கவே நினைத்­துக்­கொள்கின்­றோம்.

வடக்­கில் உள்ள இசைக் கலை­ஞர்­க­ளின் திற­மை­க­ ளுக்குக் குறைவு என்­பது இல்லை. அது எவ­ராக இருந்­தா­லும் அவர்­க­ளுக்குத் திறமை என்­பது நிறை­யவே காணப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளுக்­குப் பயிற்சி மட்­டும் கிடைக்­கு­மாக இருந்­தால் அவர்­கள் வேறு நிலைக் குச் சென்­று­வி­டு­வார்­கள். இது நான் இங்கு வந்து பார்த்த உண்மை. பயற்சி என்­பது ஒரு கலைக்கு அல்­லது எந்த ஒரு வேலைக்­கும் சரி மிக­வும் முக்­கி­ய­ மா­னது.

அந்­தப்­ப­யிற்சி கிடைக்­காத போதும் இங்­குள்ள கலை­ஞர்­கள் இவ்­வ­ளவு தூரம் செய்­கின்­றார்­கள் என்­றால் முறை­யான பயிற்சி கிடைத்­தால் வேறு ஒரு நிலை­யில் இருப்­பார்­கள் என்­பது மாற்­றம் இல்­லாத உறு­தி­யான எனது கருத்து. இசை­யில் ஆர்­வம் உள்­ள­வர்­கள் விருப்­பம் உள்­ள­வர்­கள் முன்வ­ர­வேண்­டும். எனக்கு இங்கு இருப்­ப­வர்­க­ளுக்குப் பயிற்­சி­கள் வழங்­க­வேண்­டும் என்ற விருப்­பம் வந்­துள்­ளது. கட­வு­ளின் சித்­த­மாக இருந்­தால் எதிர்­கா­லத்­தில் பார்க்­க­லாம்– என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*