;
Athirady Tamil News

கேரளாவில் வாடகை வீடு எடுத்து போதை பொருட்கள் விற்பனை- 3 பேர் கைது..!!

0

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீஇன்மா (வயது30). காசர்கோட்டை சேர்ந்த முகமதுபிலால் (32) இவர்கள் எர்ணாகுளம் தைகூட்டம் என்ற பகுதியில் கணவன்- மனைவி போல் நடித்து வாடகைக்கு வீடு எடுத்தனர். இவர்களது நண்பர் சந்திரன் என்பவரும் உடன் வசித்து வந்தார்.

இவர்களது வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி வந்து சென்றனர். இது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து களமசேரி போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது வீடு முழுவதும் போதை மாத்திரை, போதை எண்ணை, கஞ்சா பீடிகள், என்.எஸ்.டி. போதை பசை தடவிய போதை ஸ்டாம்பு உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன. மேலும் வீட்டை வாடகைக்கு எடுத்து போதை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இளம்பெண் ஸ்ரீஇன்மா மற்றும் வாலிபர்கள் முகமது பிலால், சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 7 =

*