;
Athirady Tamil News

யாழில் சிறிய குளங்களை புனரமைக்கும் திட்டம் ஆரம்பம்..!!

0

யாழ்ப்பாணம் – அராலியில் சிறிய குளங்களை புனரமைக்கும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வினை, தேசிய ஒருமைப்பட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான செயலணியின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் சிறிய குளங்களை புனரமைத்து நீர்ப்பாசனத்தை வலுப்படுத்தும் விசேட திட்டத்திற்கென ஐந்நூறு மில்லியன் ரூபாய் நிதி வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 26 சிறிய குளங்கள் தெரிவு செய்யப்பட்டு, நூறு மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வில் வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − twelve =

*