;
Athirady Tamil News

வவுனியாவில் ஜந்து வருடமாக வீதிக்கு தடையாக உள்ள மின்கம்பம் அகற்றப்படவில்லை பொதுமக்கள் தெரிவிப்பு..!! (படங்கள்)

0

வுவனியா சின்னப்புதுக்குளம் அலகரை 2ஆம் ஒழுங்கையில் காணப்படும் மின்கம்பம் ஒன்று கடந்த ஜந்துவருடங்களாக வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாகக்காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக நகரசபை, மின்சார சபையினருக்கு தெரியப்படுத்தியபோதிலும் மின்சார சபையினர் நகரசiபியினரை மின்கம்பத்தினை அகற்றுமாறும் நகரசபையின் மின்சாரசபையினரை குறித்த மின்கம்பத்தினை அகற்றுமாறு மாறி மாறி இருபகுதியிரும் கடிதம் பரிமாறிவருகின்றார்களே தவிர இருவரும் குறித்த மின்கம்பத்தினை அகற்ற எவ்வித நடவடிக்கையும் இன்றுவரையில் மேற்கொள்ளவில்லை குறித்த வீதியில் காணப்படும் மின்கம்பத்தினால்; விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. தற்போது குறித்த வீதி அகலப்படுத்தப்பட்டு செப்பணிடப்பட்டு வருகின்ற நிலையில் மின்கம்பத்தினை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வேலியின் கரையோரத்தில் நாட்டித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சின்னப்குபுதுக்குளம் அலகரை 2ஆம் ஒழுங்கையில் மதகுடன் காணப்படும் மின்கம்பமானது கடந்த ஜந்து வருடங்களாக அவ்விடத்தில் காணப்படுகின்றபோதிலும் இதனை அகற்றி தமது போக்குவரத்திற்கு இலகுபடுத்தித்தருமாறு கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து நகரசபையினருக்கும் மின்சார சபையினருக்கும் கடிதங்கள் பல அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நகரசபையினர் மின்சாரசபையினரை மின்கம்பத்தினை அகற்றுமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதற்கு மின்சாரசபையினர் தமக்கு வழங்கப்பட்ட பாதையில் சீராக நாட்டப்பட்டுள்ளதாகவும் எனினும் அவற்றில் ஒரு நபர் தமது வீட்டு மதிலினை வீதியிலிருந்து உள்ளே அமைத்துள்ளமையினால் இவ் இடையூறு உருவாகியுள்ளதாகவும் இவற்றை தாங்கள் கருத்தில் கொண்டு அதற்குரிய செலவு மற்றும் பாதையின் அமைவிடத்தை தமக்கு அறியத்தருமிடத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று நகரசபையினருக்கு கடந்த 23.08.2017 அன்று அறிவித்துள்ளனர்.

இதற்கு நகரசபையினர் பதிலினையும் அனுப்பியுள்ள நிலையில் இன்று வரையில் இருதரப்பினராலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இரவு வேளைகளில் இவ்வீதியூடாக பயணம் மேற்கொள்ளும் பலர் விபத்துக்களுக்குள்ளாகிய நிலையும் காணப்பட்டுள்ளது. வீதியிலுள்ள மின்கம்பத்தினை அகற்றி தமது பாதுகாப்பான போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் தொவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 4 =

*