;
Athirady Tamil News

வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனனதினத்தில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு..!! (படங்கள்)

0

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபதலைவர் தந்தை செல்வநாயகம் அவர்களின் 121ஆவது ஜனனதினத்தில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் (31.03) இந்த நிகழ்வு நடைபெற்றது. வவுனியா மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் தந்தை செல்வா அவையின் தலைவர் சி.வரதராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரும் வவுனியா மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தமிழ் அரசுக்கட்சியின் ஆதரவாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*