;
Athirady Tamil News

5 வயது வளர்ப்பு மகனை வெள்ளையாக்க கருங்கல்லைக் கொண்டு தேய்த்த தாய் கைது..!!

0

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் நகரைச் சேர்ந்தவர் சுதா திவாரி. இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தை கருப்பாக இருப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த சுதா அந்த குழந்தையை வெள்ளையாக்க எண்ணி கருங்கல்லைக் கொண்டு தேய்க்க முடிவு செய்துள்ளார். சுபாவின் உறவினர் ஒருவர், சுபாவிடம் இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் சுதா இதனைக் கேட்காமல் கருங்கல்லை கொண்டு குழந்தையின் உடலில் தேய்த்துள்ளார். இதனால் குழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுபாவின் உறவினர், குழந்தைகள் மீட்பு குழுவினரிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் மீட்பு குழுவினர், காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சுதா திவாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 20 =

*