;
Athirady Tamil News

ரணிலின் டிக்.. டிக் நிமிடங்கள்! களத்தில் குதித்த சர்வதேச ராஜதந்திரிகள்..!!

0

இலங்கைப் பாராளமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமது ராஜதந்திரிகளூடான அழுத்தத்தைப் பயன்படுத்தி ரணில் மைத்திரி கூட்டு அரசை 2௦2௦ வரை தொடரவைக்க பலநாடுகளின் ராஜதந்திர வட்டாரங்கள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிசெய்யும் வகையில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதாக கருதப்படும் கட்சி ஒன்றின் ஒரு உறுப்பினரது வாக்கினையும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக செயல்ப்படுத்த குறித்த கட்சியுடன் மிகநெருக்கமான தொடர்புகளைப் பேணும் வெளிநாடோன்றின் தூதுவராலயம் மேற்கொண்ட அழுத்தங்களுடன் கூடிய அனுசரணை ரணிலுக்கு ஆதரவு நிலைப்பாட்டை பெற்றுக்கொடுத்துள்ளது.

அதே போன்று மலையாக மற்றும் வர்த்தக முயற்சிகளில் அதிக கரிசனை கொண்ட முஸ்லீம் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் குறித்த ராஜதந்திர வட்டாரங்கள் தமது அழுத்தங்களை வெளிப்படுத்தியுள்ளமையும் தெளிவாகியுள்ளது.

இதேவேளை தமிழ் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களது நிலைப்பாட்டை பலமான மேற்க்குனாடோன்று கையாண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*