;
Athirady Tamil News

துடுப்பாட்ட வீரரின் ஆட்டமிழப்பை தடுத்த தேனீ..!! (வீடியோ)

0

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது தென்னபிரிக்கா பெறவிருந்த விக்கட் தேனீயால் தடுக்கப்பட்டுள்ளது.

கேசவ் மஹராஜ் வீசிய பந்தில் ஷோன் மாசை ஸ்டம் முறையில் ஆட்டமிழக்க விக்கட் காப்பாளர் குயின்டன் டிகொக்கிற்கு வாய்ப்பு கிடைத்த போது, தேனீயொன்று அவரின் கையில் கொட்டியதால் அது முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் இறுதி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவின் போது,தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி 3 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி சக விக்கட்டுக்களையும் இழந்து 488 ஓட்டங்களை பெற்றதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

இதன்படி போட்டியின் இறுதி நாளான இன்று அவுஸ்திரேலிய அணிக்கு 7 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில், வெற்றி ;பெற 524 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − two =

*