;
Athirady Tamil News

தேவேகவுடா செல்வாக்கு மிகுந்த சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா போட்டி..!!

0

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க ஆளும் காங்கிரசும், பாரதிய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றன.

கட்சிகள் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் படடியல் அறிவிக்கப்படும் முன்பே முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு வருகை தந்த சித்தராமையாவுக்கு தொகுதி மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு 750 கிலோ எடை கொண்ட பிரமாண்ட ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது.

அங்கு கூடியிருந்த மக்களிடையே சித்தராமையா பேசுகையில், “கர்நாடகத்தில் 224 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். நான் மீண்டும் இங்கு திரும்பி வருவேன், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும், முதல்-மந்திரியாக நான் மீண்டும் நீடிப்பேன். மக்களாகிய நீங்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும்” என்றார்.

சாமுண்டீஸ்வரி தொகுதி முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாகும். கடந்த 2006-ம் ஆண்டு முதல் அவரது மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரே தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். இது ஒக் கலிகர் இனத்தவர் அதிகம் வாழும் பகுதியாகும். 71,000 ஒக்கலிகர்கள், 45,000 தலித்துகள், 50,000 குருபா, 14,000 சிறுபான்மையின மக்கள் உள்ளனர். முதல்-மந்திரி சித்தராமையா குருபா இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தராமையா முன்பு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் மாநில தலைவராக இருந்தார். தேவேகவுடா தனது மகன் குமாரசாமிக்கு முக்கியத்துவம் அளித்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார்.

தற்போது அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து இருப்பதை அறிந்ததும் தேவேகவுடாவும், குமாரசாமியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் நல்ல சாலை வசதியோ, அடிப்படை வசதிகளோ இல்லாமல் இருக்கிறது. குடிநீர் பிரச்சினையும் தலைவிரித் தாடுகிறது. சித்தராமையா முன்பு மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்கு சேகரித்து இந்த தொகுதிக்கு வந்தார். 12 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + eighteen =

*