;
Athirady Tamil News

காவிரி விவகாரம் – மத்திய அரசின் மனுவையும் திங்கட்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!

0

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்கும்படி உச்ச நிதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக 6 வாரங்கள் கெடுவும் விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்று முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டது. எனவே இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருந்த மத்திய அரசு, கடைசி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் ஸ்கீம் (திட்டம்) என்பதற்கு விளக்கம் கேட்டிருந்தது. அத்துடன், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாத அவகாசமும் கேட்டிருந்தது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், வரும் 9-ம் தேதி (திங்கட்கிழமை) வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவையும் சேர்த்து விசாரிக்க உள்ளது. ஆனால், மத்திய அரசின் மனுவை விசாரிப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிதுள்ளது. #CauveryManagementBoard #SC

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 1 =

*