;
Athirady Tamil News

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை நிஷாந்தன் செய்த எளிய வேலை..!! (வீடியோ)

0

கோவில் வீதியில் உள்ள எனது பராமரிப்பில் இருக்கும் வீட்டில் மேல் பகுதியில் அடாத்தாக குடியிருக்கும் தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவையின் நிஷாந்தன் . அந்த வீட்டில் இருந்து வெளியேற மறுத்திருந்த நிலையில் . (02.04.2018) நான் குறித்த அந்த வீட்டுக்கு சென்று கீழ்ப்பகுதியில் உள்ள எனது பொருட்களான காஸ் குக்கர் , அடுப்பு, கட்டில், மெத்தை போன்றவற்றை எடுத்து கொண்டு வரும் வழியில் உறவினர் ஒருவரின் வீட்டில் காஸ் குக்கர் , மெத்தை போன்றவற்றை வைத்துவிட்டு வந்தேன்.

காரணம் எனது வீடு இருப்பதோ வடமராட்ச்சி எனவே நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு குடியிருக்க செல்லும் போது அவை அங்கு தேவைப்படும் எனும் காரணத்தாலேயே. இவற்றை அறிந்து கொண்ட குறித்த நபர் தனது அலுவலக பகுதி உடைக்கப்பட்டதாகவும் அதிலிருந்த பெறுமதியான பொருட்கள் என்னால் களவாடப்பட்ட்தாகவும் போலீசாருடன் சென்று கூட்டுக்கொள்ளைக்கு உடந்தை என கூறி அந்த வீட்டில் இருந்த 60 வயதுக்கு மேட்பட்ட முதியவரை கைது செய்து போலீஸ் லாக் up இல் அடைத்து உள்ளார்கள்.

நான் எனது பராமரிப்பில் உள்ள வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன் .காரணம் குறித்த விஷமி “வீட்டுக்கு வந்தால் கஞ்சா வைத்து பிடித்துக்கொடுத்துவிடுவேன் என்றும் தனது அரசியல் ,போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி என்னை நிரந்தரமாக சிறையில் தள்ளி விடுவேன் என்றும் மிரட்டுகிறான் “.

அத்துடன் நான் இரவில் போலீஸ் நிலையம் செல்வதற்கு மிகவும் மனப்பயத்துடனேயே இருக்கிறேன் .காரணம் 23.012018 அன்று எனக்கு நேர்ந்த சட்ட விரோத கைதே காரணம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − seventeen =

*