;
Athirady Tamil News

அரசியல் கைதிகள் பலருக்கு அறிக்கை வந்ததும் விடுதலை..!!

0

சிறை­க­ளில் வாடும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் தொடர்­பாக சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­சால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை கிடைத்­த­தும் தற்போது சிறை­யில் உள்ள பல­ருக்கு விடு­தலை வழங்கப்­ப­டும் என தலை­மை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம சிங்க உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

இவ்­வாறு ஈ.பி. ஆர். எல்.எவ். தெரி­வித்­தது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரமசிங்­கவை ஈ.பி. ஆர் எல்.எவ் கட் சி­யின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன், அந்­தக் கட்­சி­யின் செயலா­ள­ரும் வன்னி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்­தன் ஆகி­யோர் நேற்று அலரி மாளி­கை­யில் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர். அது தொடர்­பாக அவர்­கள் அனுப்­பி­யுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்பு சுமார் அரை­ம­ணி­நே­ரம் நடை­பெற்­றது. சந்­திப்­பில் சில முக்­கிய விட­யங்­கள் விவா­திக்­கப்­பட்­டன. அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பாக நாம் பேசி­ய­போது அவர்­க­ளின் விடு­தலை தொடர்­பில் ஏற்­க­னவே சிறைச்­சா­லை­கள் அமைச்­ச­ரால் ஒரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அது உட­ன­டி­யாக என்­னி­டம் கைய­ளிக்­கப்­ப­டும். தற்­பொ­ழுது சிறை­யில் உள்ள பல­ருக்கு விடு­தலை வழங்­கப்­ப­டும். ஏனை­யோர் ஒரு குறு­கிய புனர்­வாழ்­வுக்­குப் பின்­னர் விடு­விக்­கப்­ப­டு­வர் என்று எமக்கு ரணில் உத்­த­ர­வா­தம் அளித்­தார்.

403நாள்­க­ளுக்­கும் மேலாக வடக்­கு–­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் காணா­மல் ஆக்­க­கப்ட்­டோ­ரின் உற­வி­னர்­கள் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். அவற்றை அரசு கண்­டு­கொள்­ளா­மல் இருப்­பது மன­வ­ருத்­தத்­தைத் தரக்­கூ­டிய செயல். இது அர­சின் பொறுப்­பின்­மையை வெளிப்­ப­டுத்­து­கின்­றது என்­ப­தை­யும் நாம் சுட்­டிக்­காட்­டி­னோம். காலம் தாழ்த்­தா­மல் இவற்­றுக்கு உட­ன­டி­யா­கத் தீர்வு காணப்­பட வேண்­டும் என்­ப­தை­யும் வலி­யு­றுத்­தி­னோம்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கம் திறக்­கப்­பட்டு ஒரு வரு­டம் ஆகி­யும் அதற்­கான பணி­யா­ளர்­களை நிய­மித்து ஒரு­மா­தம் ஆகி­யும் பணி­கள் எது­வும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. மக்­கள் அந்த அலு­வ­ல­கத்­தின் மீது நம்­பிக்கை இழந்­தி­ருக்­கின்­றார்­கள். இது தொடர்­பாக திட்­ட­வட்­ட­மான துரித நட­வ­டிக்கை தேவை என்­ப­தை­யும் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றோம்.

வடக்­குக் -கிழக்கு மாகா­ணங்­க­ளில் மகா­வலி அபி­வி­ருத்தி என்ற பெய­ரி­லும், தொல்­பொ­ருள் ஆராய்ச்சி என்ற பெய­ரி­லும் வன வளப் பாது­காப்பு என்ற பெய­ரி­லும் பற­வை­கள் சர­ணா­ல­யம் என்ற பெய­ரி­லும் தமிழ் மக்­கள் பயிர்ச்­செய்கை செய்­து­வ­ரும் காணி­க­ளும், அவர்­க­ளது வீட்­டுக் காணி­க­ளும் சுவீ­க­ரிப்பு என்ற பெய­ரில் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­கின்­றது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மகா­வலி அபி­வி­ருத்தி என்ற பெய­ரில் 2ஆயி­ரத்து 500 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட காணி­க­ளைச் சுவி­க­ரிப்­ப­தற்கு வடக்கு மாகாண ஆளு­ந­ரால் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதை உட­ன­டி­யாக நிறுத்­த­வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சி­யல் தீர்வு ஒன்று எட்­டப்­ப­டும்­வரை காணி சுவி­க­ரிப்பு போன்ற சகல நட­வ­டிக்­கை­க­ளும் மாகாண சபை­யின் ஒப்­பு­த­லு­டன் நடை­பெற வேண்­டும் என்று நாம் வலி­யு­றுத்­தி­யுள்­ளோம்.

அது தொடர்­பான ஒரு அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­தைத் தாக்­கல் செய்­யும்­படி புனர்­வாழ்வு அமைச்­சர் சுவா­மி­நா­தன் பணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார். இவை தவிர பட்­ட­தா­ரி­க­ளின் வேலை­வாய்ப்­புக்­கள் தொடர்­பா­க­வும் வடக்கு மாகா­ணத்­தில் பல்­வேறு திணைக்­க­ளுக்கு சிற்­றூ­ழி­யர்­க­ளாக சிங்­க­ள­வர்­களை நிய­மிப்­பது நிறுத்­தப்­பட வேண்­டு­மென்­றும் ஏற்­க­னவே அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள் இட­மாற்­றம் செய்­யப்­பட்டு அந்த இடங்­க­ளுக்கு தமிழ் இளை­யோர் நிய­மிக்­கப்­பட வேண்­டும் என்று கோரி­யுள்­ளோம். அது­வும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. – என்­றுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + twenty =

*