;
Athirady Tamil News

துணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால் சிறை – சவுதியில் புதிய சட்டம்..!!

0

சவுதி அரேபியாவில் பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் மனைவி தனது கணவரின் கைப்பேசி உரையாடல்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர். அதன் அடிப்படையில் விவாகாரத்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், துணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால் அபராதத்துடன் சிறை தண்டனை அளிக்க புதிய சட்டம் ஒன்றை சவுதி அரசு இயற்றியுள்ளது. இச்சட்டத்தின் படி கைப்பேசியை உளவு பார்ப்பது பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு 5 லட்சம் சவுதி ரியால் அபராதம் அல்லது 1 ஆண்டிற்கு மேல் சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

மேலும், சமூக ஊடகங்களில் தனிநபரின் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதால் மிரட்டல், மோசடி மற்றும் அவதூறு வழக்குகள் அதிகமாகி வருகின்றன என அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம், தனிநபர் மற்றும் சமுதாயத்தின் ஒழுக்கம் மற்றும் தனியுரிமை பாதுகாக்கப்படும். அதனை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*