;
Athirady Tamil News

ஆற்றில் கார் கவிழ்ந்து சோடா கம்பெனி அதிபர்-மனைவி, மகனுடன் பலி..!!

0

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பாரப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜோய் (வயது 51). பிரபல சோடா கம்பெனி அதிபர்.

இவரது மனைவி ஷாலி (47). இவர்களது மகள் ஜிஸ்னா (23). மகன்கள் ஜீனு (20), ஜீவன் (16). ஜிஸ்னாவின் கணவர் ஜியோ (35). இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் மூணாறுக்கு காரில் சுற்றுலா சென்றனர்.

சுற்றுலா முடித்து விட்டு நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டனர். காரை மருமகன் ஜியோ ஓட்டினார். கார் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. கோதமங்கலம் செராய் பாலத்தில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை தகர்த்துக்கொண்டு தேவியார் ஆற்றில் விழுந்தது. கார் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது.

இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கோதமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி 6 பேரையும் மீட்டு அடிமாலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோய், ஷாலி, ஜீவன் ஆகியோர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் ஆலுவாயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து கோதமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + twelve =

*