;
Athirady Tamil News

காதலி படிக்கும் பெண்கள் கல்லூரியில் இடம் கேட்டு சண்டை போட்ட இளைஞன்..!!

0

சீனாவில் பெண்கள் கல்லூரியில் தனக்கு இடம் வேண்டும் என்று இளைஞன் சண்டையிட்டதும், அதற்கு அவர் சொன்ன காரணமும் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பெய்ஜிங்கில் பெண்கள் படிக்கும் கல்லூரி ஒன்று உள்ளது. தற்போது அந்த கல்லூரியில் அட்மிஷன் நடைபெற்று வரும் நிலையில், 18 வயது இளைஞன் ஒருவர் அந்த கல்லூரியில் படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.

பெண்கள் படிக்கும் கல்லூரியில் இளைஞர் விண்ணத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகம் பின்பு, தவறுதலாக இந்த விண்ணப்படிவம் வந்து சேர்ந்து இருக்கலாம் என்று எண்ணி, அந்த இளைஞருக்கு அது பெண்கள் படிக்கும் கல்லூரி என்றும், உங்களின் விண்ணப்பம் நிராகரிப்படுவதாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தைக் கண்ட பெற்றோர் உடனடியாக அவரிடம் விசாரித்த போது, நான் அந்த கல்லூரியில் தான் படிப்பேன் என்று சண்டை போட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து கல்லூரிக்கே நேரில் சென்று இங்கு எனக்கு கண்டிப்பாக இடம் வேண்டும் என்று கேட்டுள்ளான்.

அதற்கான காரணத்தை கல்லூரி நிர்வாகம் கேட்ட போது, என் உயிருக்கு உயிரான காதலி இந்த கல்லூரியில் தான் படிக்கிறாள்.

அவளைப் பார்க்காமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடியாது. அதனால் தான் பெண்கள் கல்லூரியாக இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த கல்லூரியில் சேர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட கல்லூரி நிர்வாகம் வேறு வழியின்றி அந்த இளைஞருக்கு கல்லூரியில் படிக்க இடம் கொடுத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*