;
Athirady Tamil News

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை: கமலதாசன்..!!

0

தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் எந்தவிதமான செயற்பாடுகளிலும் இனிமேல் ஈடுபடமாட்டேன் என்பதைப் பகிரங்கமாக தெரியப்படுத்துவதாக முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வி.கமலதாசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘என்னைப் பகடைக்காயாகப் பாவிப்பதற்கு எடுத்த முயற்சியினால் நான் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் எந்தவிதமான செயற்பாடுகளிலும் ஈடுபடமாட்டேன் என்பதனை பகிரங்கமாக அறிவிக்கின்றேன்.

சிலர் முகநூலில் எனது பெயரைப் பயன்படுத்தி நான் பணம் பெற்றதாகவும் இதன் காரணமாக அவர்கள் செய்யும் செயற்பாடுகளைக் கண்டு மௌனமாக இருப்பதாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகளை முகநூலில் பதிவிட்டிருப்பது எந்த விதத்திலும் உண்மையில்லை.

நான் எந்தக்காலத்திலும் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யமாட்டேன். எதிர்காலத்தில் எனது செயற்பாடுகள் குறித்து விரைவில் நான் அறிவிப்பேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*