;
Athirady Tamil News

குவைத் பாராளுமன்ற கமிட்டியின் வரைவு சட்டத்தால் இந்திய தொழிலாளர்களுக்கு சிக்கல்..!!

0

குவைத் பாராளுமன்றத்தில் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டி சமீபத்தில் புதிய வரைவு சட்டம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, 90 தினார் (குவைத் ரூபாய்) வரை ஊதியம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பும் போது அதன் மீது 1 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

இவ்வாறாக, ஊதியத்திற்கு ஏற்ப 5 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் பணப்பறிமாற்ற நிறுவனங்கள் பணத்தை அனுப்பும் போது இந்த வரி வசூலிக்கப்படும். இதனை வசூலிக்க தவறும் வங்கிகள் மற்றும் பணப்பறிமாற்ற நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

சட்டவிரோதமாக பணம் அனுப்பும் பட்சத்தில் சிறை தண்டனை மற்றும் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறாக அந்த வரைவு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 19 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு சட்டம் மீது எம்.பி.க்கள் விவாதம் நடத்திய பின்னர் சட்டமாக அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சட்டத்தை ஏற்க அரசு சம்மதிக்கவில்லை என்றே தெரிகிறது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால், சட்டவிரோதமாக பணம் அனுப்புவது அதிகரிக்கும் அது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளன.

வளைகுடா நாடான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Kuwait #TamilNews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*