;
Athirady Tamil News

சமாஜ்வாதி மற்றும் பகுஜன்சமாஜ் கூட்டணி உ.பி.யில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றும் – சிவ்பால் யாதவ்..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

சமீபத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் பாராளுமன்ற எம்.பி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றன.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி உ.பி.யில் இருந்து பா.ஜ.க.வை நிச்சயம் வெளியேற்றும் என சமாஜ்வாதி தலைவர் சிவ்பால் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்கவுள்ளது. இந்த கூட்டணி பா.ஜ.க.வை நிச்சயம் உ.பி.யில் இருந்து முழுவதுமாக வெளியேற்றி விடும்.
மாநிலத்தின் நன்மையை கருதியும், மத்தியில் மாற்றம் கொண்டு வரவும் இந்த கூட்டணி வழிவகுக்கும் என தெரிவித்தார். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*