;
Athirady Tamil News

பொய் செய்தி விவகாரத்தில் மத்திய அரசின் திடீர் திருப்பத்துக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் வரவேற்பு..!!

0

பொய்யான செய்திகளை வெளியிடுபவர்களின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற அறிவிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றதற்கு அனைத்திந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகள் அதிக அளவில் பரவுகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்து பொய் செய்திகளை உருவாக்கும் அல்லது பரப்பும் இந்திய பத்திரிக்கை தகவல் ஆணையத்தினால் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொய் செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொய்யான செய்திகள் குறித்த புகார்களை அரசு கட்டுப்பாட்டில் இல்லாத பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) மற்றும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (என்.பி.ஏ) ஆகியவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

ஒரு முறை விதிமீறினால் 6 மாத தடை, இரண்டு முறை என்றால் ஓராண்டு தடை, 3வது முறை விதிமீறியது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக இந்திய பத்திரிக்கை தகவல் ஆணையம் வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை தடுக்கவும், புதிய விதிகள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் பறிக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பொய்யான செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களின் அங்கீகாரம் பறிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட ஆணையை வாபஸ் பெற வேண்டும் என பிரதமர் அலுவலகம் இன்று அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்த அறிவிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றதற்கு அனைத்திந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அனைத்திந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று வெளியிட்டப்பட்ட கூட்டு அறிக்கையில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் சுத்ந்திரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் இன்று எடுக்கப்பட்ட மாற்றத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

’பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ எனப்படும் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும், நாளிதழ்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பேயொழிய, சுதந்திரத்துக்கு விலங்குபோடும் அமைப்பல்ல என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 4 =

*