;
Athirady Tamil News

மரணப்படுக்கையில் நாயுடன் நெகிழ்ச்சி தருணம்: கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

0

பிரித்தானியாவில் முதியவர் ஒருவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக செல்ல நாயை கொஞ்சி மகிழும் காட்சிகள் பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.

பிரித்தானியாவின் Dundee’s Ninewells மருத்துவமனையில் பீட்டர் ரோபோசென் என்கிற முதியவர் சிகிச்சை பெற்று வந்தார்.

மரணப்படுக்கையில் இருந்த பீட்டருக்கு, இறுதி ஆசையாக தன் செல்ல நாயை பார்க்க வேண்டுமென ஆசை இருந்தது.

சுவாசக் கோளாறுகள் மற்றும் கிருமித் தொற்றுக்கள் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க நாய்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை

எனினும் பீட்டரின் ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட மருத்துவமனை அனுமதி வழங்கியது.

நெகிழ்வான இத்தருணத்தை வீடியோ எடுத்த பீட்டரின் பேத்தி, பேஸ்புக்கில் வெளியிட பார்ப்போரின் கண்களை குளமாக்கின.

வெளியிட்ட 18 மணிநேரத்திற்குள் வீடியோ மற்றும் படங்கள் ஆயிரக்கணக்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டு 150,000 க்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டது.

நாயோடு கொஞ்சிய சில மணிநேரங்களிலேயே சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவரது பீட்டர் காலமானார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*