அழகான மகன் இறந்தது ஏன்? இளைஞர்களுக்கு எச்சரிக்கை செய்த தாய்..!!

பிரித்தானியாவில் ஹெராயின் போதை மருந்துக்கு அடிமையான மகன் உயிரிழந்துவிட்ட நிலையில் அது குறித்து அவரின் தாய் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டேனி ஹாக்கெட் (28) என்ற இளைஞர் தவறான நண்பர்களுடன் சேர்ந்து ஹெராயின் எனப்படும் போதை மருந்துக்கு அடிமையாகியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு டேனி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அழகாக இருந்த தன்னுடைய மகன் போதை மருந்துக்கு அடிமையானதன் காரணமாக எப்படி உருக்குலைந்து கடைசியில் காணப்பட்டான் என்பதை விளக்கும் விதத்தில் அவரின் புகைப்படங்களை தாய் டோனா வெளியிட்டுள்ளார்
Credit: BPM Media இது மற்றவர்களுக்கு போதை மருந்து குறித்த எச்சரிக்கையை கொடுக்கும் என்ற நோக்கிலேயே டோனா இதை செய்துள்ளார்.
அவர் கூறுகையில், மற்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என் மகனின் புகைப்படங்களை பாருங்கள், எப்படி போதை மருந்து அவனை மாற்றிவிட்டது என புரியும்.
இது போன்ற போதை மருந்துகளை விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும், என்னிடம் அதிக பணம் இருந்திருந்தால் போதை மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து சென்று டேனியை காப்பாற்றியிருப்பேன்.என் மகனின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை என கூறியுள்ளார்