;
Athirady Tamil News

பறக்கும் விமானத்தில் ஒல்லி ஆணின் கேள்வியும்… குண்டு பெண்ணின் பதிலும்: சுவாரசிய நிகழ்வு..!!

0

பறக்கும் விமானத்தில் குண்டான பெண்மணியின் அருகில் அமருவதற்கு இடம் கிடைத்ததால், இடைஞ்சலுக்கு ஆளான நபருக்கு அந்த பெண், சமார்த்தியமாக பதிலளித்து அந்த ஆணின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

விமானப் பயணத்தின் போது நடைபெற்ற சுவாரசிய சம்பவம் இதோ..,

நபர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்கையில், அவரது அருகில் அதிகமான எடைகொண்ட பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அப்பெண் அதிக உடல் எடை காரணமாக, இருக்கையில் அதிகமான இடத்தை அபகரித்துக் கொண்டார்.

சுமார் 6 மணிநேர பயணம் என்பதால் அந்த நபருக்கு கோபம் வந்துள்ளது.

இதனால் மிகவும் அமைதியாக இருந்த அந்நபரிடம், லாரா என்ற அப்பெண் ஹலோ என இரண்டு முறை சொல்லியுள்ளார். அதனை கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்துள்ளார் அந்த ஆண்.

மறுபடியும் அப்பெண், “நான் உங்களை தொந்தரவு செய்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள்.

நாம் இருவரும் 6 மணிநேரம் ஒன்றாக சேர்ந்து பயணிக்க போகிறோம், இதனால் நாம் நண்பர்களாக பேசிக்கொள்ளலாம் என்பதற்காக நான் ஹலோ சொன்னேன்” எனக்கூறியுள்ளார்.

லாரா, இந்த நபரிடம் மட்டுமல்லாது, விமான பணிப்பெண்களிடம் ஜாலியாக பேசியுள்ளார்.

இதனைப்பார்த்த இந்நபர், இப்பெண் அனைவரிடம் நன்றாக பழகுவா? என நினைத்துள்ளார்.

அதன்பின்னர் அப்பெண்ணிடம் சென்று இவர் பேசிய முதல் கேள்வி, “உங்கள் உடல் எடை அதிகரிப்பிற்கான காரணம் என்ன?” என்பதுதான்.

இதற்கு அப்பெண், “உங்களைப் போன்றவர்கள் எப்போதும், நாம் எப்படி இருக்கிறோம், எந்த நேரத்திலும், பார்ப்பதற்கு அழகாக இருக்கிறோமா என்றுதான் பார்ப்பீர்கள்.

ஆனால், அவற்றையெல்லாம் பார்த்து நான் எதற்காக எனது நேரத்தை வீணாக்க வேண்டும், ஏனெனில் எனக்கு அதனைவிட வேறு முக்கியமான வேலைகள் இருக்கிறது.

கடவுள் எனக்கு அதிகமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளார், அதனை அனுபவிக்க அதிகமான உடல் எடை தேவை.

அப்படியிருக்கையில் எனது உடல் எடையை குறைத்து எதற்காக எனது மகிழ்ச்சியையும் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*