;
Athirady Tamil News

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக அரசியல் கட்சிகளின் முடிவு..!!

0

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க த.மு.கூ முடிவு..!!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 அமைச்சர்கள் வாக்களிக்க உள்ளதாக கட்சித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் நாளை (04) நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி முடிவு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று (03) மாலை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இடையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் நாளை (04) நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு ஆரதவாக ரிஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் 05 பாராளுமன்ற உறுப்பினர்களும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.

பிரதமருக்கு, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், ஆதரவு!

மனோ, திகாவின் த.மு.கூ., சம்பிகவின் ஹெல உருமயவும் ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாளை (04) இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

இன்று (03) இடம்பெற்ற மு.கா. வின் உயர் பீட கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த, கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் எதிர்காலம், நாட்டின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, கட்சியின் உயர் பீட கூட்டத்தில் ஆராய்ந்து குறித்த முடிவை ஏகமனதாக எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி எனும் வகையில், தற்போது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஒன்றாகவே பார்க்கின்றோம் என்றார்.

அதற்கமைய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடையச் செய்வது என, உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க.வுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர் ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 05 எம்.பிக்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, அமைச்சர் சம்பிக ரணவக (ஜாதிக ஹெல உருமய கட்சியின் செயலாளர்) உள்ளிட்ட ஜாதிக ஹெல உருமய கட்சிகள், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 14 =

*