;
Athirady Tamil News

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று..!!

0

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (04) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த விவாதம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. 9.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தினேஷ் குணவர்தன அடங்கலான கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.

14 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 55 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். இதில் சுதந்திர கட்சி அமைச்சர்கள் நான்கு பேர் கையொப்பமிட்டிருந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*