;
Athirady Tamil News

வவுனியாவில் நடமாடும் வியாபாரிகளினால் பாதசாரிகளுக்கு இடையூறு..!! (படங்கள்)

0

வவுனியாவில் நடமாடும் வியாபாரிகளினால் பாதசாரிகளுக்கு இடையூறு!

நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

வவுனியா நீதிமன்றத்திற்கு பின்பக்கமாகவுள்ள வவுனியா – ஹேரவப்போத்தானை வீதியில் பாதசாரிகளின் நடைபாதையில் வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுவதினால் பொதுமக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர் .

அங்கு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாத வகையில் பொருள்களை வைத்து விற்பனையில் ஈடுபடுவதுடன் நடைபாதையில் நடந்து செல்லும் சமயத்தில் தம்மை பொருட்களை வாங்குமாறு வற்புறுத்துவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக பல தடவைகள் வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்தியும் நகரசபையினரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதே போன்று வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் நகரசபையின் கட்டுப்பாட்டை மீறி வீதியில் பொருட்களை வைத்து விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 1 =

*