;
Athirady Tamil News

ஒருவருட பூர்த்தி காணும் கண்டாவளை கல்வி நிலையம்..!! (படங்கள்)

0

கனடா நாட்டில் வசிக்கும் ஜீவானந்தன்,கருணாகரன்,சிவகுமார் ஆகியோரின் நெறிப்படுத்தலில் கண்டாவளை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கடந்தவருடம் நான்காம் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பிள்ளையார் கல்வி நிலையம் நேற்றைய தினம் தனது ஒருவருட பூர்த்தியை நிறைவு செய்திள்ளது

நேற்றைய தினம் பிள்ளையார் கல்வி நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆண்டு பூர்த்தி நிகழ்வில் நிர்வாகிகள் ,ஆசிரியர்கள் கௌரவிக்கப் பட்டதுடன் சிறந்பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது

தரம் ஒன்றும் முதல் தரம் பதினோன்று முதல் எழுபத்தாறு மாணவர்கள் கல்வி கற்கும் இவ் கல்வி நிலையத்தின் கடந்த தவணை பரீட்சையில் தொண்ணூறு வீதமான மாணவர்கள் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதன் போது கருத்துத் தெரிவித்த நிர்வாகிகள் எமது சிறு முயற்சியில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக இவ் கல்விநிளையத்தை சாதாரண வசதிகளுடன் ஆரம்பித்துள்ளோம் இக் கல்விநிலையத்தை என்னும் முன்னேற்ற கண்டாவளை புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் கிளிநொச்சி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டம் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை புலம்பெயர் உறவுகள் இவ்வாறான கல்விநிலையங்களை அமைத்து முன்னேற்ற வேண்டும் என வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்

இன் நிகழ்வில் நிவாகிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + five =

*