;
Athirady Tamil News

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்குபேர் கைது..!!

0

பொகவந்தலாவை ஜேப்பஸ்டன் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போதே நான்கு பேரும் இன்று புதன்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ ஜேப்பஸ்டன் தோட்டபகுதியில் கடந்த காலங்களில் தேசிய இரத்திணக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையால் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் இந்த நான்கு சந்தேக நபர்களும் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததுள்ள நிலையில், சுமார் ஒரு வருடகாலமாக குறித்த பகுதிக்கான அனுமதியை தேசிய இரத்திணக்ககல் மற்றும் தங்க ஆபரனங்கள் அதிகாரசபை இடைநிறுத்தியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்டவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யபட்ட சந்தேகநபர்கள் பொகவந்தலாவ ஜேப்பஸ்டன் டி.பி.தோட்ட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நான்கு பேருக்கும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், 24.04.2018 செவ்வாய் கிழமை அன்று ஹட்டன் நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு பொகவந்தலாவ பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + fifteen =

*