;
Athirady Tamil News

ஆர்.எஸ்.எஸ். சொல்படியே பிரதமர் செயல்படுகிறார் – ராகுல் காந்தி..!!

0

கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

224 உறுப்பினர்களை கொண்ட அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரசும், ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் கடுமையாக போராடி வருகின்றனர். இரு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5-வது கட்டமாக 2 நாள் பயணமாக கர்நாடகாவில் பிரசாரம் செய்து வருகிறார்.

சிவமோக்காவில் நடந்த பிரசார கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சொல்படியே மோடி செயல்படுகிறார் என்று அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்திய மக்களுக்கு அன்பை நேசிக்கக் கூடிய தலைமை மட்டுமே தேவை. வெறுப்பை சம்பாதிக்கக் கூடிய நிர்வாகி தேவையில்லை. அதை மக்கள் விரும்பவும் இல்லை.

பிரதமர் மோடி எப்படி பேச வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பாடம் நடத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். சொல்படிதான் பிரதமர் செயல்படுகிறார். தலித் மக்களை மத்திய அரசு ஒடுக்குகிறது. மோடி ஆட்சியில் தான் தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சிறுபான்மையினர் எந்த உரிமையையும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

மோடி தலைமையிலான அரசு எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்தது போக செய்து தலித் மக்களை ஒடுக்கி வருகிறது. இதற்கு எதிராக போராடும் மக்கள் தாக்கப்படுகிறார்கள். இதற்கு தலித் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். சித்தராமையா தொடர்ந்து முதல்வராக நீடிப்பார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #Rahulgandhi

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*