;
Athirady Tamil News

களனி விஹாரையில் பெறுமதி மிக்க புராதன பொருட்கள் திருட்டு : பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸ்..!!

0

களனி ரஜ மகா விஹாரையில் இருந்த புராதன பெறுமதி மிக்க பொருட்கள் பல திருடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக களனி பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவமானது நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகள் ஊடாக களனி விஹாரையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கண்கானிப்பு கமராக்களில் இருந்து திருடன் என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். அதன்படி திருடன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் 071- 6868675, 011- 2947780 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கும் களனி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 071- 8591593, 011- 2914666 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கும் அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + four =

*