;
Athirady Tamil News

ஜெயலலிதா மரணம்- 6 மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்..!!

0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசு டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழு விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை வழங்கியது. ஜெயலலிதாவின் உதவியாளர், தனி செயலாளர்கள் என பலரும் விசாரணைக்குள் கொண்டுவரப்பட்டு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவும் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ, தர்மராஜன், பாலாஜி, சங்கர் ஆகியோர் ஏப்ரல் 6-ம் தேதி ஆஜராகும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் ஏப்ரல் 7-ம் தேதி ஜெ.தீபக், ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன்ராவ், டாக்டர்கள் முரளிதரன், தினேஷ் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 12 =

*