;
Athirady Tamil News

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் கண்காட்சி- குவியும் சுற்றுலா பயணிகள்..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் அமைந்துள்ளது. இந்திரா காந்தி துலிப் தோட்டம் என பெயரிடப்பட்ட இந்த தோட்டத்தில் சிவப்பு, மஞ்சள் போன்றபல வண்ணங்களில் துலிப் மலர்கள் உள்ளன. ஆண்டு தோறும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெறும் இந்த கண்காட்சி மிகவும் புகழ்பெற்றதாகும்.

வண்ணமயமான இந்த மலர்கள் கண்காட்சியானது மக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 15 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் மலர் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து அமைதியற்ற நிலை நீடித்து வருவதால் காஷ்மீருக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனால் காஷ்மீர் சுற்றுலா துறைக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்யவே இந்த கண்காட்சி நடைபெறுகிறது. #TulipGarden #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 6 =

*