;
Athirady Tamil News

கேரளாவில் தொடரும் சம்பவம் – மதம்பிடித்த யானை பாகனை குத்திக்கொன்றது..!!

0

கேரளாவில் அதிகளவில் யானைகள் வளர்க்கப்படுகிறது. கோவில்கள், சரணாலயங்கள் போன்ற இடங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. மேலும் தனியார் பலரும் அரசின் அனுமதிபெற்று யானைகளை வளர்த்து வருகிறார்கள்.

இந்த யானைகளை பராமரிக்க பாகன்களும் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் இந்த யானைகளை கோவில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.

இதுபோன்ற சமயங்களில் கூட்டம் மற்றும் வெடி சத்தத்தை கேட்டு யானைகள் மிரண்டு ஓடுவதும், மதம் பிடித்து அட்டகாசம் செய்வதும் கேரளாவில் சமீப காலமாக அதிகமாக நடந்து வருகிறது.

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடந்த பங்குனி ஆராட்டு விழாவின்போது யானை மிரண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பாலக்காடு அருகே மதம்பிடித்த யானை மிரண்டு ஓடியபோது பாகனை குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. பலியான பாகனின் பெயர் கண்ணன். மேலார்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நடந்த பவனி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் ஒரு யானையை அழைத்துச் சென்றார். அங்கு வைத்து யானைக்கு நெற்றி பட்டம் கட்டி அலங்காரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த யானை திடீரென்று மதம்பிடித்து ஓடியது. அதை பாகன் கண்ணன் அடக்க முயன்றதால் அவரை தும்பிக்கையால் தூக்கி கீழே வீசி தந்தத்தால் குத்திக்கொன்றது.

அதன்பிறகு அந்த யானை அங்கிருந்து வெளியில் ஓடி ஒரு தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கிருந்த பெரிய மரங்களை வேரோடு சாய்த்து அட்டகாசம் செய்தது. இதைகண்டு பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை அடக்கினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + sixteen =

*