;
Athirady Tamil News

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய கட்டடத்திறப்பு விழா..!! (படங்கள்)

0

????????????????????????????????????
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய கட்டடத்திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தின் நீண்ட கால பிரச்சனையாக இருந்த கட்டட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் வடமாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட இக்கட்டட திறப்பு விழா அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றம் இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனால் இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது. மேலும் பாடசாலை மாணவர்களினால் கலை நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தின் நீண்ட கால பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமைந்த இந்நிகழ்வில் டமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றம் இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வவுனியா கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.பி.நடராஜா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + five =

*