கேன்சரால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய தெலுங்கானா போலீஸ்..!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் இஷான் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். 2-ம் வகுப்பு படித்து வரும் அச்சிறுவன் போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என விருப்பப்பட்டுள்ளான். அவனது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராச்சகோண்டா மாநகர போலீஸ் கமிஷ்னர், இஷானை ஒருநாள் போலீஸ் கமிஷ்னராக நியமித்தார்.
இன்று கமிஷ்னர் அலுவகத்திற்கு வந்த இஷானை போலீஸ் அதிகாரிகள் சல்யூட் அடித்து வரவேற்றனர். பின்னர், கமிஷ்னருக்கான இருக்கையில் இஷான் அமரவைக்கப்பட்டார். சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவர் கமிஷ்னராக நியமிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். #TamilNews