;
Athirady Tamil News

சடலங்களை வைத்து நூதனப் போராட்டம்..!!

0

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்கக் கோரி, இரத்தினபுரி பல்லேபத்த பகுதியில் இரண்டு சடலங்களை வைத்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2 ஆம் திகதி எம்பிலிப்பிட்டி – இரத்தினபுரி பிரதான வீதியில் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் 34 மற்றும் 38 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய பேருந் துச் சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உயிரிழந்தவர்களின் சடலங்களை வைத்து அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி,எம்பிலிப்பிட்டி வீதியூடான போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்து உரிமையாளர் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் நட்ட ஈடு வழங்குவதாக தெரிவித்தன் பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 12 =

*