;
Athirady Tamil News

ஆஸ்திரேலிய வீரர்களின் தடைக்காலம் மிகஅதிகம்..!!

0

பந்தைத் திட்­ட­மிட்­டுச் சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரத்­தில் தடை­பெற்­றுள்ள, ஆஸ்­தி­ரே­லிய வீரர்­க­ளான சிமித், வோர்­ணர், ஆரம்­பத் துடுப்­பாட்ட வீரர் பான்­கு­ரொப்ட் ஆகி­யோ­ருக்கு விதிக்­கப்­பட்ட தடை மிக­வும் அதி­க­மா­னது என்று குறிப்­பிட் டுள்ள ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் வீரர்­க­ளின் அமைப்பு, தடைக்­கா­லத்தை குறைக்க வேண்­டும் என்­றும் ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் சபை­யி­டம் கோரிக்கை வைத்­துள்­ளது.

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில், ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் வீரர்­கள் பந்­தைத் திட்­ட­மிட்­டுச் சேதப்­ப­டுத்­தி­னர். திட்­டத் துக்கு மூளை­யா­கச் செயற்­பட்­ட­வ­ரான வோர்­ணர், அதை ஏற்­றுக்­கொண்ட அணித் தலை­வர் சிமித் இரு­வ­ருக்­கும் தலா ஓர் வரு­டம் தடை விதிக்­கப்­பட்­டது.

திட்­டத்­தைச் செயற்­ப­டுத்­தி­ய­வ­ரான ஆரம்­பத் துடுப்­பாட்ட வீரர் பான்­கு­ரொப்ட்­டுக்கு 9 மாதங்­கள் தடை விதிக்­கப்­பட்­டது. ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் சபையே இந்­தத் தடை­களை விதித்­துள்­ளது. ஆஸ்­தி­ரே­லிய வீரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தண்­டனை சற்று அதி­க­மா­னது என்று இரக்­கப்­ப­டு­வோ­ரும் இருக்­கத்­தான் செய்­கின்­ற­னர். இந்த நிலை­யில் இவ்­வா­றா­ன­தொரு பரிந்­து­ரையை வைத்­தது ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் வீரர்­க­ளின் அமைப்பு.

ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் தலை­மைத் தேர்­வா­ளர் மார்க் வார்க்­கும் மூன்று வீரர்­க­ளுக்­கும் ஆத­ர­வைத் தெரி­வித்­தார். ‘‘தடைக்­கா­லம் முடிந்­த­தும் வீரர்­கள் மூவ­ரும் அணிக்­குத் திரும்ப நீண்­ட ­கா­லம் எடுத்­துக்­கொள்­ளப்­ப­டாது. உட­ன­டி­யாக அவர்­கள் அணிக்கு அழைக்­கப்­ப­டு­வார்­கள்’’ என்று மார்க் மேலும் தெரி ­வித்­தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*