;
Athirady Tamil News

பிரதமர் வெற்றிபெற்றதையடுத்து வவுனியாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி கொண்டாட்டம்..!! (படங்கள்)

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடும் முகமாக வவுனியாவில் நேற்றிரவு (04) 11.00 மணிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் தேற்கடிக்கப்பட்டுள்ளது.கடந்த 21ம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும்இ எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் ரணிலுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக, வவுனியா நகரப்பகுதியில்(பழைய பேருந்து நிலையத்தில்) இரவு 11மணியளவில் தம்பா விடுதியின் உரிமையாளரான பிரேமனந்தராஜாவும் ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான கருணாதாசவும் இவ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − four =

*