;
Athirady Tamil News

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை..!!

0

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 03ம் திகதி வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

எனினும் அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த தடை உத்தரவு இடையூறாக இருக்காது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 1 =

*