;
Athirady Tamil News

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!!

0

யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் இன்று அதிகாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – பொத்துவில் பஸ்ஸை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது பஸ்ஸில் பயணித்த காத்தான்குடியை சேர்ந்த முஹமட் அனாஸ் 51வயதுடைய நபரை 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + seven =

*