;
Athirady Tamil News

சபைக்குள் ‘சம்பந்தனுடன் தம்படம்’..!!

0

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மீதான விவா­தம் நேற்­றுக் காலை நாடா­ளு­மன்­றில் ஆரம்­ப­மா­ன­வேளை சபை பர­ப­ரப்­பா­கவே காணப்­பட்­டது. அவைக்­குள் இருந்த உறுப்­பி­னர்­கள் குழு­வா­கக் கூடி நின்று பேச்­சு­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

இப்­படி பர­ப­ரப்­புக்கு மத்­தி­யி­லும் பிர­தான எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான இரா.சம்­பந்­த­னு­டன் சபைக்­குள் தம்­ப­டம் எடுத்து மகிழ்ந்­தார் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கண்டி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மயந்த திஸா­நா­யக்க.

தனது இருப்­பி­டத்தை நோக்கி சம்­பந்­தன் வரு­கை­யில், அவ­ரைச் சந்­தித்து ஏதோ பேசிய பின்­னரே குறித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தம்­ப­டம் எடுத்­தார். சம்­பந்­த­னும் சிரித்­த­ப­டியே ‘போஸ்’ கொடுத்­தார். நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + three =

*