;
Athirady Tamil News

கூட்­ட­மைப்­பின் கட்­ட­ளை­களை செயற்­ப­டுத்த ரணில் எழுத்­து ­மூ­லம் உறுதி..!!

0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பால், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம­ சிங்­கவை ஆத­ரிப்­ப­தற்கு விதிக்­கப்­பட்ட 10 நிபந்­த­னை­க­ளை­யும் செயற்­ப­டுத்­து­வ­தாக, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எழுத்­து­மூ­லம் உறு­தி­ய­ளித்­துள்­ளார். தலைமை அமைச்­ச­ரி­னால் வழங்­கப்­பட்ட கடி­தத்தை, எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நேற்­றுக் காண்­பித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்;டம் நேற்று மாலை நடை­பெற்­றது. இதன்­போதே மேற்­படி கடி­தம் காண்­பிக்­கப்­பட்­டது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது.

கார­சா­ர­மான விவா­தம் நடை­பெற்­றது. தலைமை அமைச்­ச­ரை­யும் நேரில் சந்­தித்­துக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பேச்சு நடத்­தி­யி­ருந்­த­னர்.

இந்­தப் பேச்­சுக்­க­ளின்­போது, 10 நிபந்­த­னை­கள் கூட்­ட­மைப்­பி­னால் முன்­வைக்­கப்­பட்­டது. அதனை ஏற்­றுக் கொள்­வ­தாக ரணில் எழுத்­து­மூ­லம் உறு­தி­ய­ளிக்­க­வேண்­டும் என்று கோரி­யி­ருந்­த­னர். அத­னைச் செயற்­ப­டுத்­தவே ரணில் இணக்­கம் தெரி­வித்து எழுத்­து­மூ­லம் பதி­ல­ளித்­துள்­ளார்.

கூட்­ட­மைப்­பி­னால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­கள்,

புதிய அர­ச­மைப்பு முயற்­சியை எதிர்­வ­ரும் தமிழ் – சிங்­க­ளப் புத்­தாண்­டு­டன் மீண்­டும் ஆரம்­பித்­தல்.

வடக்கு – கிழக்­கில் தமிழ் மக்­கள் பிர­தே­சத்­தில் படை­கள் வசம் தொடர்ந்ம் உள்ள நிலப்­ப­ரப்­புக்­களை விடு­வித்­தல்.

இதே­கா­லத்­தில் சிறை­யில் வாடும்­ அர­சி­யல் கைதி­களை மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்­தல். பயங்­க­ர­வாத தடைச் சட்­டம் மீளப் பெறப்­ப­ட­வேண்­டும்.

காணா­மல்­போ­னோ­ரின் உற­வு­கள் கடந்த ஓராண்­டாக வீதி­யில் உள்ள நிலை­யில் காணா­மல்­போ­னோர் செய­ல­கம் என்ற ஒன்­றைத் தவிர வேறு எந்த உருப்­ப­டி­யான முன்­னேற்­ற­மும் இல்­லா­த­மை­யி­னால் அதற்­கான பொறுப்­புக்­கூ­ற­லு­டன் உரிய தீர்­வி­னைக் கூறு­தல். வடக்கு – கிழக்­கில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் கிளை­கள் அமைத்­தல்.

வடக்கு கிழக்­குப் பகு­தி­க­ளில் தொழில் முயற்சி என்­னும் பெய­ரில் குடி­யேற்ற முயற்­சி­யோடு அந்­தப் பகுதி மக்­க­ளின் உரிமை மறுக்­கப்­ப­டு­வது தொடர்­பில் நீண்­ட­கா­ல­மா­கச் சுட்­டிக்­காட்­டும் விட­யத்­திற்கு உரிய தீர்வு வழங்­கு­தல்.

வடக்கு கிழக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர், யுவ­தி­கள் வேலை வாய்ப்­பின்­றி­யுள்ள நிலை­யில் விசே­ட­மாக வேலை­வாய்ப்பு வழங்கி அதற்­கான தீர்வை வழங்­கு­வ­தோடு வடக்கு கிழக்கு பகு­திக்­குத் தெற்­கில் இருந்து நிய­ம­னம் வழங்­கு­வ­தனை நிறுத்­து­தல்.

வடக்கு கிழக்கு மாகா­ணத்­தின் 8 மாவட்­டங்­க­ளிற்­கும் தமிழ் அரச அதி­பரை நிய­மித்­தல்.

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளில் திட்­டங்­கள் அபி­வி­ருத்­தி­க­ளின்­போது மாகாண அர­சின் கொள்­கை­கள் திட்­டங்­க­ளிற்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தோடு திட்­டத்­த­யா­ரிப்­பின்­போதே மாகாண சபை­யின் கருத்­தைப் பெறு­தல்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − four =

*