;
Athirady Tamil News

இரு கட்­சி­க­ளும் தமி­ழ­ருக்கு அநீ­தி­யையே இழைக்­கின்­றன- சிவ­சக்தி ஆனந்­தன்..!!

0

ஆட்சி மாற்­றத்­தில் பெரும்­பங்கு வகித்­த­வர்­கள் தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும். மூன்று ஆண்­டு­கள் கடந்­தும் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை பிர­தான கட்­சி­கள் நிறை­வேற்­ற­வில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் தெரி­வித்­தார்.

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மீதான விவா­தத்­தில் நேற்­றுக் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இரண்டு பிர­தான கட்­சி­க­ளும் ஒன்­றாக இருந்­தால் தான் தீர்வு காண முடி­யும் என்று நினைத்து ஆத­ரவு வழங்­கி­னோம். ஆனால், நீங்­கள் எதி­ரும் புதி­ரு­மாக இருந்து, வாக்­கு­று­தி­க­ளில் இருந்து வில­கிச் செல்­கின்­ற­மை­யா­னது அனைத்து மக்­க­ளுக்­கும் இழைக்­கும் அநீதி. பெரிய ஒரு அழிவை சந்­திக்­கும் நிலைக்கு நீங்­கள் சென்­றுள்­ளீர்­கள். நீண்ட கால­மாக புரை­யோ­டிப் போயுள்ள பிரச்­சி­னை­ க­ளுக்­கும் போர்க்­குற்­றங்­க­ளுக்­கும் தீர்வு கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் ஆட்சி மாற்­றத்­துக்கு ஆத­ரவு வழங்­கி­னோம்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பில் அவர்­க­ளின் உற­வி­னர்­கள் ஆரம்­பித்­துள்ள போராட்­டத்­துக்கு 405 நாள்­கள் கடந்­தும் இது­வரை தீர்வு கிட்­ட­வில்லை. தென் பகு­தி­யில் இருப்­ப­வர்­க­ளைக் கொண்டு வந்து அதி­கா­ரி­க­ளா­க­வும், அரச ஊழி­யர்­க­ளா­க­வும் வடக்­கில் நிய­மிக்­கின்­றீர்­கள். 3 இலட்­சத்து 60 ஆயி­ரம் ஏக்­கர் தமிழ் மக்­க­ளின் காணி­களை மகா­வலி அபி­வி­ருத்­திக்­காக கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளீர்­கள். அந்­தக் காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும் – – என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 15 =

*