;
Athirady Tamil News

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையினை அதிகூடிய ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது…!!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னரான சாவகச்சேரி பிரதேச சபையின் முதலாவது அமர்வு உள்ளூராட்சி ஆணையளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது பிரதேச சபை தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. அப்பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் க.வாமதேவனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக க.சதீஸ்வரனும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. அதில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெறும் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு 23 வாக்குகளை பெற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை பெற்றது.

தொடர்ந்து இடம்மெற்ற உப தவிசாளர் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வரத்னம் மயூரன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 19 =

*