;
Athirady Tamil News

ஆயுதங்களுடன் அங்கொட லொக்காவின் சகாக்கள் நால்வர் கைது..!!

0

மனிதப் படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 04 சந்தேகநபர்கள் ஒரு தொகை ஆயுதங்களுடன் அத்துருகிரிய மற்றும் ஹோகந்தர பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் ​கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் அதே பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த 19ம் திகதி அத்துருகிரிய, கல்வருசாவ பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் மற்றும் கடந்த 26ம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்று மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஆகியவற்றுடன் இவர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் இருந்து ரீ 56 ரக துப்பாக்கி, அதற்கான 12 தோட்டாக்கள், 06 கத்தி,மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் 02 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும் அதன் மூலம் உழைத்த 80,000 ரூபா பணமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சந்தேகநபர்கள் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் அங்கொட லொக்காவின் சகாக்கள் என்று அறியப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − ten =

*