;
Athirady Tamil News

வவுனியாவில் நீண்­ட­கா­ல­மாக மோச­மான நிலை­யில் வீதி­கள்..!!

0

அண்­மைக் கால­மாக வவு­னியா மாவட்­டத்­தின் பல வீதி­கள் முழு­மை­யாகச் சேத­ம­டைந்த நிலை­யில் கவ­னிப்­பா­ரற்றுக் கிடக்­கின்­றன தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் போக்­கு­வ­ரத்து செய்­கின்ற வவு­னி­யா­வின் பல முக்­கி­ய­மான வீதி­கள் இனங்­காட்­டப்­பட்­டும், உரி­ய­வர்­க­ளுக்கு முறை­யிட்­டும், போராட்­டங்­களை நடத்­தி­யும் எந்த முன்­னேற்­ற­மும் இன்றி காணப்­ப­டு­கின்­றன என்று பல­ரா­லும் குற்­றஞ்­சாட்­டப்­பட்டுள்ளன. இது தொடர்­பிவ் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

ஒரு பிர­தே­சத்­தின் அத்­தி­யா­வ­சிய உட்­கட்­டு­மா­னங்­க­ளில் மிக முக்­கி­ய­மா­னது வீதியே ஆகும். கிரா­மப்­பு­றங்­க­ளில் வாழும் மக்­கள் தமது அன்­றாட மற்­றும் அடிப்­படை வச­தி­களை நிறை­வேற்­றிக் கொள்­வ­தில் தர­மான வீதி­கள் பெரும் பங்கு வகிக்­கின்­றன.

வவு­னியா –மன்­னார் முதன்மை வீதி, நெளுக்­கு­ளம் ஊடாக வீர­பு­ரம் செல்­லும் வீதி, பூவ­ர­சங்­கு­ளம் ஊடாக செட்­டி­கு­ளம் செல்­லும் வீதி, குழு­மாட்­டுச் சந்­தி­யூ­டாகச் சுந்­த­ர­ பு­ரம் செல்­லும் வீதி, பிர­ம­னா­லங் கு­ளம் பெரிய தம்­பனை வீதி, கோவில்­குள மூடாக சிதம்­ப­ர­பு­ரம் செல்­லும் வீதி, ஓமந்தை சேம­மடு வீதி, சாந்­த­சோலை – பூந்­தோட்­டம் பிர­தான வீதி,உள்­ளிட்ட மக்­கள் பாவனை அதி­க­முள்ள வீதி­கள் அடங்­க­லாக வவு­னியா மாவட்­டத்­தின் மூன்­றில் இரண்டு பகுதி மக்­கள் பயன்­ப­டுத்­து­கின்ற வீதி­கள் அனைத்­தும் போக்­கு­வ­ரத்­துக்கு ஒவ்­வாத வீதி­க­ளா­கவே காணப் ப­டு­கின்­றன.

போர்க் காலங்­களை விடத் தற்­போது தான் வீதி­க­ளின் நிலை கேவ­ல­மாக உள்­ளன என்று மக்­கள் விச­ன­ம­டைந்­துள்­ள­னர். இந்த வீதி­க­ளில் ஒரு சில வீதி­க­ளைத் தவிர ஏனைய பெரும்­பா­லா­னவை மாகாண அமைச்­சுக்­குள் வரு­வ­த­னால் வடக்கு மாகாண வீதி அபி­வி­ருத்தி அமைச்­சும் மத்­திய அர­சும் வவு­னியா மாவட்­டத்தைப் புறக்­க­ணிக்­கின்­ற­னவா? துறை­சார் அமைச்­சர்­கள், வர இருக்­கின்ற தேர்­தல்­களை கணக்­கில் கொண்டு தமக்கு வாக்­க­ளிக்க கூடிய மக்­கள் இருக்­கின்ற தொகு­தி­யின் அபி­வி­ருத்­தி­யில் மட்­டும் கவ­னம் செலுத்­து­கின்­ற­னரா? என்ற ஐயப்­பா­டு­கள் வவு­னியா மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளன.

வடக்­கின் மிக முக்­கிய போக்­கு­வ­ரத்து மைய­மான வவு­னி­யா­வின் வீதி­கள் சீர­ழிந்து உள்­ளமை வவு­னியா மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி வேறு மாவட்­டங்­க­ளில் இருந்து வரும் மக்­க­ளுக்­கும் சிர­மத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

குறிப்­பாகத் தின­மும் மன்­னார் நக­ரத்­தில் இருந்­தும் மன்­னார் மாவட்­டத்­தின் எல்­லைப்­புறக் கிரா­மங்­க­ளில் இருந்­தும் வவு­னி­யா­வுக்­குப் பய­ணம் செய்­யும் ஆயி­ரக் கணக்­கா­ன­வர்­க­ளும் இத­னால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

எனவே இவற்றைக் கருத்­தில் கொண்டு இந்த வீதி­களைத் துரித கதி­யில் சீரமைக்க அனைத்து தரப்­பி­ன­ரும் நட­வ­டிக்கை எடுத்து போக்­கு­வ­ரத்து வச­தி­களை மேம்­ப­டுத்த உதவ வேண்­டு­மென பொது­மக்­கள் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

வவு­னியா நெளுக்­கு­ளம் நேரி­ய­கு­ளம் வீதி மற்­றும் வவு­னியா பிரம­னாலங்­கு­ளம் வீதி தொடர்­பாக வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை நிறை­வேற்று பொறி­யி­ய­லா­ளர் கெங்­கா­த­ர­னி­டம் கேட்­ட­போது, ‘‘நெளுக்­கு­ளம் தொடக்­கம் நேரி­ய­கு­ளம் வரை­யான 23 கிலோ ­மீற்­றர் தூர­மான பாதை­யில் 6கிலோ­மீற்­றர் பாதை சீராகக் காப்­பட் இடப்­பட்­டுள்­ளது. மீதி 13கிலோ­மீற்­றர் வீதி தற்­கா­லி­மாக போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்ற வகை­யில் திருத்­தி­ய­மைக்­க­ பட்­டுள்­ளது. மிகுதி வீதி திருத்­தும் செயற்­பா­டு­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அது போலவே வவு­னி­யா­வில் இருந்து பிர­ம­னா­லங்­கு­ளம் வரை­யான 30 கிலோ­மீற்­றர் பாதை­யும் தற்­கா­லி­க­மாக திருத்­தி­ய­மைக்­க­பட்டு வரு­வ­து­டன் இந்த வீதி­யும் அத்­தோடு பூவ­ர­சங்­கு­ளம் ஊடான செட்­டி­கு­ளம் வீதி­யும் செயற்­ப­டுத்தப்பட இருக்­கின்ற ஐறோட் செயற்­திட்­டத்­தில் முழு­மை­யாக காப்­பட் இட்டு சீர­மைக்­க­பட உள்­ள­த­னால் அது வரைக்­கும் தற்­கா­லி­க­மாக போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்ற விதத்­தில் திருத்­தி­ய­மைக்­க­பட்டு வரு­கின்­றன.

நொச்­சி­மோட்டை பாலம் அடிக்­கடி பழு­த­டைந்து வரு­கின்­றது. அதனை நிரந்­த­ர­மான சிமேந்­தி­லான பால­மாக அமைத்து தரும்­படி பல­த­ட­வை­கள் மாகாணத் திணைக்­க­ளத்­துக்கு கோரிக்கை வைத்து வரு­கின்­றேன். அவர்­கள் அதற்­கு­ரிய நிதி­ திட்­டங்­களை எமக்கு வழங்­கி­னால் நிச்­ச­ய­மாக எம்­மால் செயற்­ப­டுத்­தப்­ப­டும்.

நிதியே இங்கு முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாகக் காணப்­ப­டு­கின்­றது. இருந்­தா­லும் எம்­மால் இய­லு­மான வரை­யில் நாம் சேவை செய்து வரு­கின்­றோம்” என்று தெரி­வித்­தார்.ஏனைய வீதி தொடர்­பாக வீதி அபி­வி­ருத்தி திணைக்­கள முதன்­மைப் பொறி­யி­ய­லா­ள­ரி­டம் கேட்­ட­போது,‘‘சாந்த சோலை வீதி, மற்­றும் தம்­பனை வீதி, சுந்­த­ர­பு­ரம் வீதி­களையும் இன்­னும் ஓரிரு கிழ­மை­க­ளில் திருத்­தி­ய­மைப்­ப­தற்­கு­ரிய ஏற்­பா­டு­கள் ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஐநாட் ­திட்­டத்­தில் இந்த வீதி­க­ளும் 2019ஆம் ஆண்­ட­ள­வில் நிரந்­த­ர­மாக சீர­மைக்­க­பட உள்­ள­தால் தற்­பொ­ழுது போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்ற விதத்­தில் திருத்­தி­ ய­மைக்­கப்­பட்டு வரு­கின்­றன’’ என்று தெரி­வித்­தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + two =

*