;
Athirady Tamil News

குழந்தையின் மூளைக் காயத்தை கவனிக்காத மருத்துவமனை: தந்தை மடியில் உயிரிழந்த பரிதாபம்..!!

0

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த நான்கு வயது பிரித்தானியக் குழந்தையின் மூளைக் காயத்தை எகிப்திய மருத்துவர்கள் கவனிக்காததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Indianna Maddison என்னும் அந்தக் குழந்தையின் பெற்றோர் அவளை எகிப்திற்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த Indiannaவுக்கு முதலுதவி அளித்தபின் அவளை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவள் நன்றாக இருப்பதாகவும் அவளை பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லலாம் என்றும் கூறி அனுப்பி விட்டார்கள்.

பிரித்தானியாவில் அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியதைக் கேட்டு அவளது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் Indiannaவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அடுத்த நாள் Indianna தனது தந்தையின் கைகளில் உயிரிழந்தாள்.மருத்துவர்களின் கவனக் குறைவினால் ஒரு குடும்பம் தங்கள் அருமை மகளை இழந்து தவிக்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + four =

*