;
Athirady Tamil News

நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது ஒருவர் உயிரிழந்தால் என்னவாகும்?..!!

0

நடுவானில், காதலியிடம் புரபோஸ் செய்தல், திருமணம், குழந்தை பிரசவம் வரை பல விடயங்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால் திடீரென்று ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ அவர் இறந்துபோனாலோ என்னவாகும் என்று யோசித்திருக்கிறீர்களா?

கடந்த ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியா சென்ற விமானம் ஒன்றில் பயணித்த பிரித்தானியப் பெண் ஒருவர் திடீரென்று உயிரிழந்தார்.

இன்னொரு சம்பவத்தில் துருக்கியிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தகைய நேரங்களில் விமான ஊழியர்கள் என்ன செய்வார்கள்?இதுபோன்ற சந்தர்ப்பங்களைக் கடந்து வந்த சில பயணிகளிடம் கேட்டபோது, சில விமானங்களில் இறந்த உடலை வைப்பதற்கென தனி அலமாரி போன்ற அமைப்பு காணப்படும்

Airbus A340-500 விமானத்தில் ஒரு உடலை வைப்பதற்கு ஏற்ற லாக்கர் வசதி உண்டு.

சரி, லாக்கர் இல்லாத விமானங்களில் என்ன செய்வார்கள்?

விமான ஊழியர்கள் எத்தகைய அசாதாரண சூழல்களையும் எதிர்கொள்ளும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்.

சில நேரங்களில் இறந்தவரின் உடல் business வகுப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு பயணிகள் யாரும் இல்லாத வரிசையில் வைக்கப்படும்.

சில நேரங்களில் இறந்த உடலை வைப்பதற்கான பையில் வைத்து உடல் மூடப்படும். சில நேரங்களில் இறந்தவர் அவரது இருகையிலேயே உட்கார வைக்கப்பட்டு ஒரு போர்வையால் போர்த்தி வைக்கப்படுவார்.

இந்த நடைமுறைகள் விமான நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*